ஏய் மஸ்க்… கார்களை பறக்க விடுறது… எங்க ரோஹித் ஷெட்டி ஸ்டைல் டா… இணையத்தில் மீம்களை போடும் நெட்டிசென்கள்… வைரலாகும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 17, 2026

Spread the love

டெஸ்லா நிறுவனத்தின் அதிபர் ஈலான் மாஸ்க், விண்வெளி நிறுவனமான ‘SpaceX’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் காற்றில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘Tesla Roadster’ மாடல் காரின் புதிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்காலப் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாகக் காட்டப்பட்ட இந்தத் திறன் வாய்ந்த காரின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் கவனத்தைப் பெற்றது.

இந்த வீடியோவைக் கண்ட இந்திய இணையவாசிகள் உடனடியாக இதனை பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படங்களுடன் ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்களைப் பகிரத் தொடங்கினர். ரோஹித் ஷெட்டி தனது அதிரடி திரைப்படங்களில் கார்களைக் காற்றில் பறக்கவிடுவதையும், தலைகீழாகப் புரள வைப்பதையும் வழக்கமாகக் கொண்டவர் என்பதால், “எங்கள் லெஜண்ட் ரோஹித் ஷெட்டியைக் நகலெடுப்பதை நிறுத்துங்கள் ஈலான் மாஸ்க்” என்று கமெண்ட்டுகளில் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.

   

மேலும், கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் இந்தத் தொழில்நுட்பத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மற்றும் குண்டும் குழியுமான சாலைகளுக்கு இந்தப் பறக்கும் கார் தான் சரியான தீர்வு என்றும், காரின் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிலை என்னவாகும் என்றும் பலதரப்பட்ட நகைச்சுவையான கருத்துகளுடன் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.