“இனிமே பாத்துக்கிட்டிருந்தா காலி”…. அதிமுகவை காப்பாற்ற களமிறங்கும் சசிகலா…. இபிஎஸ் தலையில் இறங்கிய பேரிடி…. அதிரடி திருப்பம்….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

அதிமுக தோற்றுவிக்கப்பட்டு 54 ஆண்டுகளை நிறைவு செய்து 55வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கட்சியின் தொட்ட இடமெல்லாம் தொய்வும் தோல்விகளுமே ஏற்பட்டு வருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தவெகவின் எழுச்சி மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல் முடிவுகள் போன்ற காரணங்களால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், இக்கட்டான இக்காலகட்டத்தில் கட்சி மீளவேண்டுமானால் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உழைப்பால் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த அதிமுக, தற்போது ஒரு சிலரின் சுயநலத்தால் பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இயக்கம் அடைந்துள்ள வீழ்ச்சிக்குத் தவறான முடிவுகளே காரணம் என்றும், இயக்கத்தின் பலன்களை அனுபவித்தவர்கள் விலகிச் சென்றாலும், உண்மையான தொண்டர்கள் இன்னும் விசுவாசமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுங்கி நிற்பவர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். இனியும் தாமதித்தால் இயக்கத்தைக் காப்பாற்றுவது கடும் சவாலாக மாறிவிடும் என்பதால், தொண்டர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஒற்றுமையை உடனடியாக எட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

   

எம்ஜிஆர் எதற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, அந்த லட்சியம் வீண் போய்விடக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, அதிமுக மீண்டும் ஒரு வலிமைமிக்க பேரியக்கமாக உருவெடுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மீண்டும் “அம்மாவின் பொற்கால ஆட்சியை” மலரச் செய்ய அனைத்துத் தரப்பினரும் ஒரே குடையின் கீழ் திரண்டு வர வேண்டிய கட்டாயக் காலம் கனிந்துள்ளதாக அவர் விடுத்துள்ள இந்த அறைகூவல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.