“உன் கூட வாழ முடியாது”…. நள்ளிரவில் வெடித்த குடும்பச் சண்டை…. கர்நாடகப் பெண்ணை பீர் பாட்டிலால் துடிதுடிக்க கொன்ற கொடூரக் கணவன்…!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவரால் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் பகுதியைச் சேர்ந்த நவீத் பாஷா மற்றும் அவரது மனைவி ரூபியா தாஜ் ஆகியோர் மதனப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியுள்ளது. புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த கடுமையான வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த நவீத் பாஷா தனது மனைவியை பீர் பாட்டிலால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, குற்றவாளி நவீத் பாஷா நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று தானாகவே சரணடைந்தார். தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விடுதிக்கு விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்ததுடன், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியரிடையே இருந்த சந்தேகமும், திருமணத்திற்குப் புறம்பான உறவு குறித்த தகராறுமே இந்தச் கொடூரக் கொலைக்கு முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்திக்கின்றனர்; இது குறித்த தீவிர விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.