அச்சோடா… 7 இந்திய நகரங்களில் சுற்றிய கொரியத் தாயின்… நெஞ்சைப் பறித்த அந்த மர்மான அழகிய இடம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

இந்தியாவில் சுமார் இரண்டு ஆண்டுகளாக வசித்து வரும் ஜங் என்ற கொரிய தாய், தான் பயணம் செய்த 7 இந்திய நகரங்கள் குறித்த தனது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நகரமும் வெவ்வேறு விதமான கலாச்சாரம், உணவு முறை மற்றும் தனித்துவமான அழகைக் கொண்டுள்ளதாக அவர் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது தான் கண்டறிந்த இடங்களில் அந்தமான் தீவுகள் தன் இதயத்தை முழுமையாகக் கவர்ந்ததாக அவர் கூறியுள்ளார். அங்குள்ள தெளிவான நீல நிறக் கடல் மற்றும் இயற்கையின் பிரம்மாண்ட அழகு தனக்கு மாலத்தீவை ஞாபகப்படுத்தியதாகவும், அந்தத் இயற்கை அழகு தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் சிலாகப்பித்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/DeOlmTRyF7T/?utm_source=ig_web_button_share_sheet

   

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்த சமயத்தில் அந்தமானுக்குச் சென்றது தனக்கு மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தந்ததாகத் தெரிவித்தார். மேலும், உள்ளூர் மக்களின் அன்பான வரவேற்பும், அந்தத் தீவின் இயற்கைச் சூழலும் தன்னை மிகவும் ஈர்த்ததாகவும், இந்தியாவில் இன்னும் பல இடங்களை ஆராய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.