“அலங்காரம் முக்கியம்தான், ஆனா உயிர் முக்கியமில்லையா…? வண்ண பெயிண்ட்டால் வளைவில் சறுக்கிய பைக்குகள்… சோஷியல் மீடியாவில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 15, 2026

Spread the love

மேற்கு வங்காளத்தில் துர்க்கா பூஜை கொண்டாட்டங்களை முன்னிட்டு கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா மேம்பால சாலையில் அடிக்கப்பட்ட வண்ணப் பெயிண்டிங் அலங்காரம், பைக் ஓட்டுநர்களுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. நேற்று அக்டோபர் 14 அன்று அந்த மேம்பாலத்தின் வளைவில் திரும்ப முயன்ற மூன்று மோட்டார் சைக்கிள்கள், சாலையில் பூசப்பட்டிருந்த பெயிண்ட்டால் டயர் பிடிமானம் இழந்து அடுத்தடுத்து சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின.

காரின் டாஷ்கேமில் பதிவான இந்தத் திகிலூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சாலையில் பெயிண்ட் அடிப்பதால் டயருக்கும் சாலைக்கும் இடையிலான உராய்ப்பு உராய்வு குறைந்து வாகனம் சறுக்கும் என்றும், மழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், சாலைப் பாதுகாப்பு குறித்த கேள்விகள் ஓங்கி ஒலித்து வருகின்றன.