“31 கோடி செலவு செஞ்சேன்… அந்த நாய்கிட்ட போயிருப்பேனா?”…. குதிரை பேர விவகாரத்தில் வெடித்த அதிர்ச்சி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 14, 2026

Spread the love

தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில், திமுக மற்றும் அதிமுகவின் ஆதிக்கத்தை வீழ்த்தி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது. பல நடிகர்களும் தங்களது அரசியல் பயணத்தைத் தொடங்க தயாராகி வரும் நிலையில், பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் அண்ணாமலை குறித்து பாஜகவின் முன்னாள் நிர்வாகியான கரு நாகராஜன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 21.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி 18.5 சதவீத வாக்குகளைப் பெற்றது குறித்து கரு நாகராஜன் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை மீதான மக்களின் நம்பிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த வாக்குவங்கி அப்படியே தொடர்ந்திருந்தால், 2026 தேர்தலில் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி மலர்ந்திருக்கும் என்றும், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை கட்சி தவறவிட்டுவிட்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார்.

   

தற்போது அண்ணாமலை கட்சியில் இல்லாததால், மக்கள் மாற்று வழியை நோக்கித் திரும்பி தவெகவுக்கு வாக்களித்துள்ளதாகக் கூறிய அவர், இனிவரும் தேர்தல்களில் மக்கள் அரசியலில் கல்வி மற்றும் நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து சிந்திப்பார்கள் என்றார். மேலும், அதிமுகவின் 26 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தவெகவுக்கு மாறுவதற்காக எம்.எல்.ஏக்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகப் பொள்ளாச்சி ஜெயராமன் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்தும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

   

குதிரை பேர விவகாரங்கள், இடைத்தேர்தல் வழக்குகளால் தமிழக அரசு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த கரு நாகராஜன், தமிழ்நாட்டில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஊடகங்களும் பொதுமக்களும் தீவிர விவாதம் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக அரசியலின் இந்தத் திடீர் திருப்பங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.