“மோர் வயிற்றை கெடுக்கும், பீர் குடிங்க…” சிறுநீர் கழித்தால் சலுகை கட்…! சர்ச்சைக்குரிய விளம்பரம்… இன்ஸ்டா ரீல்ஸால் அதிரடியாக கைதான உரிமையாளர்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் இயங்கி வரும் ரெஸ்டோ பார் ஒன்றின் உரிமையாளர், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட விசித்திரமான விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “எல் நினோ வெயிலுக்கு மோர் குடித்தால் வயிறு கெட்டுவிடும், அதனால் ரூ.1,200 கொடுத்து அன்லிமிடெட் பீர் குடியுங்கள், ஆனால் இடையில் சிறுநீர் கழித்தால் சலுகை ரத்து” என்று நடிகர் சத்யராஜின் சினிமா பாணியில் அவர் பேசிய அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.

புதுச்சேரி கலால் துறை விதிகளின்படி, மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலோ அல்லது வாடிக்கையாளர்களை மது அருந்தத் தூண்டும் வகையிலோ விளம்பரங்கள் செய்வதற்குத் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில் அந்தக் கடைக்கு அதிரடியாகச் சீல் வைத்த கலால்துறை அதிகாரிகள், சர்ச்சைக்குரிய அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.