“எஸ்கேப் ஆக பாக்குறியா…?” சிறுவனுக்கு விழுந்த பளார்…! தலைமுடியை பிடித்து அடித்த இளம்பெண்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்வத் மாவட்டம் பரோட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட காந்தி சவுக் பகுதியில், சிறுவன் ஒருவன் நடுரோட்டில் வைத்து இளம்பெண் ஒருவரால் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பெண் சிறுவனின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சரமாரியாக அறைவதுடன், அங்கிருந்த பொதுமக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் செல்போனில் வீடியோ பதிவு செய்யும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பாக்வத் காவல்துறையினர், கடந்த செப்டம்பர் 12 அன்று காந்தி சவுக் பகுதியில் பெண்ணொருவரின் செல்போனைத் திருடிக்கொண்டு தப்பியோட முயன்றபோது அப்பெண் சிறுவனை மடக்கிப் பிடித்ததாகவும், அவரிடமிருந்து கைப்பபேசி மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். வீடியோவில் பதிவான அந்தப் பெண்ணை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.