திக்.. திக்..! சுவரில் மோதி தலைகீழான கார்… யாருக்கும் காயமில்லை… வீட்டின் அருகே நடந்த பயங்கர விபத்து… வைரலாகும் சிசிடிவி வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 13, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள போராவாஸ் கிராமத்தில், குறுகிய சந்தில் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்தது. பனார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிராமத்தின் குறுகலான பாதையில் கார் திரும்ப முயன்றபோது, குஷால் சர்காரா என்பவரின் வீட்டின் அருகே இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அதிவேகமாக வந்ததாகக் கூறப்படும் கார், சுவரில் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, விபத்து நிகழ்ந்த விதம் குறித்து கவனத்தை ஈர்த்துள்ளன. குறுகிய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இச்சம்பவம் உணர்த்துகிறது.