பேரவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா படலத்தைத் தொடங்கி வைத்து அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பியவர் மரகதம் குமரவேல். அதன்பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகக் களமிறங்கி, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அமோக வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மக்கள் மத்தியில் அவர் பெற்றுள்ள இந்த வலுவான ஆதரவு, கட்சியின் முக்கியப் புள்ளிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்ய முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவின் கொள்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லும் மரகதம் குமரவேலுக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று பனையூர் வட்டாரங்கள் வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றன. தேர்தல் களத்தில் தன் திறமையை நிரூபித்தவர், தற்போது ஆளுங்கட்சியின் நிர்வாகத்திலும் முக்கியப் பங்காற்றத் தயாராகி வருவதாகத் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
