தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை EMIS (கல்வி மேலாண்மை தகவல் முறைமை) தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 12-ஆம் தேதி வரை நீட்டித்துத் தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட முக்கியக் குறிப்புகளைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மிகக் கவனமாகச் சரிபார்த்துத் துல்லியமாகப் பதிவேற்ற வேண்டும் என்றும், இதில் பதிவிடப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்படும் என்பதால் எந்தவொரு பிழையுமின்றிப் பணியை நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
