திமுகவின் தேர்தல் உத்திகளில் எப்போதும் ஒரு தனித்துவமான வியூகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இடைத்தேர்தல்களில் சீனியர் நிர்வாகிகளை மட்டுமே நம்பியிராமல், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 750 இளைஞரணி நிர்வாகிகளைத் களமிறக்கியது அக்கட்சிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
குறிப்பாக, ‘1 பூத்துக்கு 10 யூத்’ என்ற கணக்கில் இளைஞர்களை நியமித்து, அவர்களை நேரடியாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்துப்பிரசாரம் செய்ய வைத்த இந்த வித்தியாசமான வியூகமே, திமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், சற்றுக் கூடுதல் வாக்குகளையும் பெற முக்கியக் காரணமாக அமைந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
