திமுகவிற்கு பேரதிர்ச்சி…. அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரம் அதிரடியாக தவெகவில் ரீ-என்ட்ரி…. காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 13, 2026

Spread the love

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரமாகவும், தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளியாகவும் அறியப்படும் பில்லா ஜெகன், மீண்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த இவர், தற்போது மீண்டும் தனது பழைய கட்சியை நோக்கியே திரும்புகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தவெக தலைவர் விஜய்யுடன் பில்லா ஜெகன் இணைந்துள்ள படங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் (போஸ்டர்கள்) அதிரடியாக ஒட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்ட தவெக செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பில்லா ஜெகனின் இந்த திடீர் திருப்பம், தவெக கட்சி வட்டாரங்களுக்குள் சலசலப்பையும், மறுபுறம் திமுக தரப்பில் எதிர்பாராத அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனின் கோட்டையாகக் கருதப்படும் தூத்துக்குடி அரசியலில் பலத்த செல்வாக்கு வைத்துள்ள பில்லா ஜெகனின் இந்த ரீ-என்ட்ரி, வரவிருக்கும் அரசியல் நகர்வுகளில் திமுகவுக்குப் பெரும் பின்னடைவாகவும், தவெகவுக்கு கூடுதல் பலமாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.