கேரளாவில் நெடுமாச்சேரி அருகே நடந்த கோர விபத்தில், பணக்கார திமிரில் சொகுசு காரை மணிக்கு 120 கி.மீ வேகத்தில் இயக்கி மூன்று மாணவர்களின் உயிரைப் பறித்த சுஹைல் சஜீவ் என்ற 19 வயது இளைஞரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ஐஹெச்ஏ டிசைன்ஸ் உரிமையாளர்களின் மகனான இவருக்கு, சமீபத்தில்தான் அவரது தாயார் நூஹா சஜீவ் இந்த மினி கூப்பர் காரைப் பரிசளித்துள்ளார்.
விபத்திற்குப் பின் காவல்துறையினரின் விசாரணையின் போது, “என் அப்பா எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்” என்று சுஹைல் திமிராகவும் ஆணவமாகவும் பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தில் உள்ள அந்தஸ்தும் பண பலமும் தங்களைச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக மாற்றியிருப்பதாக இதுபோன்ற வாரிசுகள் நம்புவது வெட்கக்கேடானது.
எந்தவொரு சொகுசு காரோ, செல்வாக்குமிக்க குடும்பமோ அல்லது கோடிக்கணக்கான பணமோ பொன்னான அந்த மூன்று மாணவர்களின் உயிரைத் திருப்பிக் கொடுக்க முடியாது. இந்த வழக்கில் சமுதாயத்தில் எந்த நிலையில் உள்ளவராக இருந்தாலும் பாரபட்சமின்றி ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
