திருட்டு ஐபோனா இது…? என் பணம் எங்க…? கல்லூரி மாணவரின் தலை, கை, கால்களில் வெட்டி கொன்ற 17 வயது பள்ளி மாணவன்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

திருப்பூர் ஏபிடி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளியங்கிரியின் மகன் ஸ்ரீ ஹரி அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் பாலாஜி என்பவரிடம் குறைந்த விலையில் ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8,000 வாங்கியுள்ளார். ஆனால் ஸ்ரீ ஹரி வாங்கித் தந்தது லாக் செய்யப்பட்ட திருட்டு ஐபோன் என்பது தெரியவந்துள்ளது. கொடுத்த பணத்தையும் புதிய செல்போனையும் திரும்பக் கேட்கும்போது ஸ்ரீ ஹரி காலம் தாழ்த்தியதால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர், மீன் மற்றும் இறைச்சி வெட்டும் கத்தியைப் புதிதாக விலைக்கு வாங்கி ஸ்ரீ ஹரியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஸ்ரீ ஹரியை வெளியே அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது தலை, கழுத்து, வயிறு மற்றும் கை, கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ஸ்ரீ ஹரியைத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தேடப்பட்டு வந்த 17 வயது பள்ளி மாணவர் திருப்பூர் நீதிமன்றத்தில் நேரில் சென்று சரணடைந்ததுடன், இக்கொலைச் சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.