ஓடுனா மட்டும் விட்டுருவேனா…? ஐபோனை திருடி ஓடிய வாலிபர்… ஸ்கூட்டரை விடாமல் பிடித்து சண்டை… சிசிடிவியில் பதிவான ஷாக்கிங் காட்சி…!!

By Devi Ramu on ஐப்பசி 11, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானா பி.ஆர்.எஸ் நகர் பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றில் சினிமாப் படங்கள மிஞ்சும் வகையிலான துணிகரத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடைக்குத் தவணை முறையில் ஐபோன் வாங்குவது போல விசாரித்துச் சென்ற நபர் ஒருவர், சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் செல்போனைத் தனது ஷர்ட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

உடனடியாக உஷாரான கடைக்காரர், அவர் தப்பியோட முயன்ற ஆக்டிவா ஸ்கூட்டரின் பின் பகுதியை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். வாலிபர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டியபோதும், விடாப்பிடியாக சுமார் 10 முதல் 15 மீட்டர் தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். கடைக்காரரின் இந்தத் தீவிரமான போராட்டத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்த திருடன், ஐபோனையும் ஸ்கூட்டரையும் அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியோடினார். சிசிடிவியில் பதிவான இந்த அதிரடிச் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.