கேரள மாநிலம் அதானி பகுதியில் அதிவேகமாக வந்த மினி சொகுசு கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகச் சாலையோரம் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இக்கோர விபத்தில் ஸ்கூட்டரில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காரை இயக்கிய சுஹைல் சஜீவ் என்ற ஓட்டுநரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா அல்லது போதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரின் அதிவேகம் பலரின் உயிரைக் குடித்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
