“அரசியலில் என்ன வேணாலும் நடக்கலாம்”…. தவெகவுடன் பாமக கூட்டணி?….. ஒரே போடாய் போட்ட அன்புமணி….. கொதிக்கும் அரசியல் களம்….!

By Nanthini on ஐப்பசி 11, 2026

Spread the love

தவெகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தவெக அமைச்சரவையில் பாமக இடம்பெறும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுதொடர்பாக விளக்கம் அளித்திருந்த அவர், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாமக தொடர்வதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே கூட்டணி தொடருமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றும், அரசியலில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.