ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள்களை வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிப்போம் என்று மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அமெரிக்காவின் சொந்த சந்தைக்காகத் திடீரெனத் தன் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளார். அமெரிக்காவில் எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக, ரஷ்யாவுடன் புதிய டீசல் கொள்முதல் ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அக்டோபர் 9 அன்று கையெழுத்தான இந்த ட்ரம்ப்-புதின் ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா உடனடியாக 3,00,000 டன்களுக்கும் அதிகமான டீசலை அமெரிக்காவிற்கு விநியோகிக்கவுள்ளது. இதற்காக வரும் ஏப்ரல் 7, 2027 வரை குறிப்பிட்ட ரஷ்ய டீசல் பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க கருவூலத் துறை தற்காலிக அனுமதியையும் வழங்கியுள்ளது. மற்ற நாடுகள் வாங்கினால் போர் நிதி என்றும், அமெரிக்க லாரி ஓட்டுநர்களுக்குத் தேவைப்பட்டால் அனுமதி என்றும் அமெரிக்கா காட்டும் இந்த இரட்டை நிலைப்பாடு சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
