உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம், தாதியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்யாண்பூர் கிராமத்தில், விவசாய நிலத்தின் எல்லையைப் பிரிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே கடுமையான தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த நபர்கள், எதிர்தரப்பைச் சேர்ந்த பெண் ஒருவரின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, நடுவயலில் வைத்து மிருகத்தனமாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. நில அளவை செய்வதற்கு அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற வன்முறைகளுக்குக் காரணம் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கான்பூர் மண்டல ஐஜி போலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
