ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் முன்னாள் கணவர் காரோங் ஒன்கோலர், டெல்லி நீதிமன்றத்தில் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் போது மேரி கோம் தமக்கு எதிராகப் பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அவதூறு வழக்கு அக்டோபர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை வரும் நவம்பர் 19-ஆம் தேதி நீதிமன்றம் மேற்கொள்ள உள்ளது.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்றம் இன்னும் விசாரணைகளைத் தொடங்கி, தனது முடிவை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
