தம்பி.. ஹாஸ்டலுக்கு சரக்கு வந்துரும்… காச மட்டும் ரெடி பண்ணு… மாணவர்களை குறிவைத்து நடந்த பகீர் மது பிசினஸ்… டேராடூனில் அரங்கேறிய சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 9, 2026

Spread the love

டேராடூனின் பிரேம்நகர் பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத மதுபான விநியோக கும்பலை கலால் துறை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கல்லூரி மற்றும் விடுதி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சட்டவிரோதமாக மதுபானம் விநியோகிக்கப்பட்டு வந்தது அம்பலமானது. இச்சோதனையின் போது சண்டிகரில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி பெற்ற ரெட் லேபிள் , வேலன்டைன் உள்ளிட்ட பிரீமியம் பிராண்டுகளின் 95 வெளிநாட்டு மதுபாட்டில்களும் 28 பீர் கேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சோதனையின் போது ஆதித்யா குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கார்வித் விக்ராந்த் என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கார்வித் ஏற்கனவே சட்டவிரோத மது விற்பனை வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

https://twitter.com/askbhupi/status/2108491485780095115/video/1

   

மேலும் விசாரணை நடத்தியதில், கார்வித்தின் தாயாரும் முன்பு சட்டவிரோத மது விற்பனை மற்றும் இருப்பு வைத்திருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் குடும்ப பின்னணியுடன் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்தச் சட்டவிரோத மதுபான நெட்வொர்க்கை கலால் துறையினர் வெற்றிகரமாக முடக்கியுள்ளனர்.