JUST IN : விஜயின் விசில் சத்தத்தால் அதிர்ந்த தேர்தல் களம்…. திகைக்க வைக்கும் தவெக வேகம்…. அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்….!

By Nanthini on ஐப்பசி 9, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தாராபுரம் தொகுதியில் 9-வது சுற்று நிலவரப்படி, தவெக வேட்பாளர் சத்தியபாமா 24,047 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பானுமதி 21,935 வாக்குகளையும், திமுக வேட்பாளர் சுகன்யா 19,972 வாக்குகளையும் பெற்றுள்ளனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 1,891 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சுமணன் 442 வாக்குகளும் பெற்றுப் பின் தங்கியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் வெளியாகும் போது, இந்த முன்னிலை நிலவரம் மேலும் மாறுதல்களுக்கு உள்ளாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதிகளில் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் களம் மிகுந்த பரபரப்புடன் காணப்படுவதுடன், தவெக வேட்பாளர்களின் இந்த அதிரடி முன்னிலை தேர்தல் களத்தில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது.