தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) அதிகாரப்பூர்வ நிலவரப்படி, இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிமுக வேட்பாளர் பானுமதி 5,573 வாக்குகள் பெற்று 592 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் சத்தியபாமா 4,981 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா 4,016 வாக்குகளுடனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 352 வாக்குகளும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 107 வாக்குகளும் பெற்றுள்ள நிலையில், தாராபுரத்தில் அதிமுக மீண்டும் தனது வெற்றியை நோக்கி உறுதியாக நகர்ந்து வருகிறது.
