“அக்கா புருஷன் தான் வேணும்…” குழந்தைகளுடன் தவிக்கும் பெண்… கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டும் தங்கை…? பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

பிகார் மாநிலம் தர்பங்கா நகரிலுள்ள உருது நடுநிலைப் பள்ளியில் பி.பி.எஸ்.சி மூலம் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் சுனிதா குமாரி என்பவர், தனது சொந்த அக்காவின் கணவரான விஜேந்திர குமார் சிங் என்பவரை ரகசியமாக நீதிமன்றத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மூத்த சகோதரி பிரீதி தெரிவித்த புகாரில், கடந்த 2014-ஆம் ஆண்டு விஜேந்திர குமாருடன் தனக்குத் திருமணம் ஆகி பிஞ்சுக் குழந்தைகள் உள்ள நிலையில், சட்டப்பூர்வ விவாகரத்து ஏதும் பெறாமல் தனது சொந்தத் தங்கையே கணவரைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

   

மேலும், தனது வீட்டை இடிக்க முயல்வதோடு 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுத் தங்கை மிரட்டுவதாகவும் அவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியை சுனிதா குமாரிக்கு மாவட்டக் கல்வி அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாரெனவும், துறைரீதியான விசாரணைக்குப் பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.