என்ன நடந்தது தெரியுமா?… காரை துவம்சம் செய்த ராட்சத கரடி… உள்ளே இருந்தவருக்கு என்னாச்சு?… நள்ளிரவில் நடந்த பயங்கரம்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 5, 2026

Spread the love

ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் உள்ள பிஃபுகா பகுதியில், நள்ளிரவில் காரில் சென்றுகொண்டிருந்த ஓட்டுநருக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. செப்டம்பர் 29 அன்று இரவு, இருண்ட சாலையில் ஒரு தாய் கரடியும் அதன் குட்டியும் செல்வதை பார்த்த ஓட்டுநர் தனது காரை சற்று தள்ளி நிறுத்தியுள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்த தாய் கரடி திடீரென திரும்பி, அசுர வேகத்தில் பாய்ந்து வந்து காரின் முன்பக்கப் பானட் மீது ஏறித் தாக்கியது. தனது குட்டிக்கு கார் மூலம் ஏதோ ஆபத்து வந்துவிட்டது என நினைத்த அந்த கரடி, ஆக்ரோஷமாக தனது நகங்களாலும் பற்களாலும் காரை கடுமையாக சேதப்படுத்தியது.

இந்த எதிர்பாராத கோரத் தாக்குதலில் காரின் முன்பகுதியில் பலத்த கீறல்களும், ஓட்டையும் ஏற்பட்டது. சிறிது நேரம் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பிறகு, அந்த தாய் கரடி தனது குட்டியுடன் மீண்டும் பத்திரமாக காட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த முழு சம்பவமும் காரில் இருந்த டேஷ்கேமில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நல்வாய்ப்பாக, காருக்குள் இருந்த ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. காட்டு விலங்குகள், குறிப்பாக தாய் விலங்குகள், தங்கள் குட்டிகளைப் பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.