திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் மற்றும் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் பெரும் பரபரப்பு நிலவியது. விழாவின் தொடக்கமாகக் குத்துவிளக்கு ஏற்றப்பட்டபோது, எம்பி கிறிஸ்டோபரின் கையிலிருந்த மெழுகுவர்த்தியை எம்எல்ஏ விஜி பறித்துத் தானே விளக்கேற்ற முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் மூண்ட நிலையில், அங்கிருந்த அமைச்சர் ரமேஷ் உடனடியாக தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
