ஆந்திர மாநிலம் திருப்பதி மாநகராட்சியின் 7-வது வார்டுக்கு உட்பட்ட கொல்லைவாணி குண்டா பகுதியில், நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமாக உளவு பார்த்த நபர் ஒருவரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர் ஆபத்தான ‘செட்டி கேங் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாக அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்களது கும்பலைச் சேர்ந்த சுமார் 15 முக்கிய உறுப்பினர்கள் திருப்பதி பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக பிடிபட்ட நபர் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருப்பதி நகர மற்றும் நகர் புறப் பகுதிகளில் காவல்துறையினர் நள்ளிரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
