பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜோரா படக் அருகிலுள்ள தர்மபுரா பகுதியில் மனதை உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தெருவில் சென்று கொண்டிருந்த 5 வயது சிறுமி ஒருவரை, மனநலப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காரணமின்றி கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராதத் தாக்குதலால் அந்தச் சிறுமி அலறித் துடித்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய், குழந்தையைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த மனநலப் பாதிக்கப்பட்ட பெண் சிறுமியின் தாயாரிடமும் மிகவும் மோசமாகவும் மரியாதையின்றியும் நடந்துகொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தலையிட்டு குழந்தையையும் தாயையும் மீட்க முயற்சி செய்துள்ளனர்.
https://twitter.com/HassanbZaib/status/2106101408911286301/video/1
இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளதோடு, மனநலப் பாதிக்கப்பட்ட நபர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
