“நீங்க வேறு வழி பாருங்க!”… கூட்டணியை விட்டு விரட்டியடித்த ஸ்டாலின்… இத்தனை ஆண்டு ரகசியத்தை உடைத்த விசிக தலைவர்… அதிர்ச்சியில் திமுக வட்டாரம்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் திமுகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியாகவே திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பயணித்து வந்தது. இடையில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து மாற்றுப் பாதையில் சென்றாலும், 2026 சட்டமன்றத் தேர்தல் வரை திமுகவுடனான அவர்களின் அரசியல் உறவு தொடர்ந்தது. ஆனால், 2026 தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது உரிய மரியாதையும், கேட்ட தொகுதிகளும் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த விசிக, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்த்த விசிக, அக்கட்சி 108 இடங்களில் வென்று ஆட்சியமைக்க முக்கிய ஆதரவாக அமைந்ததுடன், தற்போதும் தவெக கூட்டணியிலேயே வலுவாகத் தொடர்கிறது.

இந்தச் சூழலில், சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன், 2016-ல் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறியதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2011 மற்றும் 2014 தேர்தல்களில் திமுகவுடன் இணைந்து செயல்பட்ட தங்களை, 2016-ல் கூட்டணியை விட்டு விலகுமாறு மு.க.ஸ்டாலின் தான் அறிவுறுத்தினார் என்று அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். திமுக 180 முதல் 200 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட விரும்புவதாகவும், எனவே விசிக வேறு மாற்று வழியைத் தேடிக்கொள்ளலாம் என ஸ்டாலின் வெளிப்படையாகக் கூறியதாலேயே, தாங்கள் அப்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேற நேரிட்டதாக திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.