“காங்கிரஸை ஓரங்கட்ட திமுகவின் அதிரடி மெகா திட்டம்…” தேசிய அரசியலில் புதுப் புயலைக் கிளப்பும் ‘3-வது அணி’ பேச்சுவார்த்தை… பரபரப்பில் அரசியல் களம்…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

தேசிய அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளின் அதிகார சமன்பாட்டை மாற்றியமைக்கும் நோக்கில், காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து ‘மூன்றாவது அணி’ அமைப்பதற்கான முதற்கட்ட நகர்வுகளை திமுக மேலிடம் தீவிரப்படுத்தியுள்ளது.

காங்கிரசுடனான தொடர் இழுபறி மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, இனி தேசிய அளவில் காங்கிரஸை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள திமுக தலைமை, மாநில சுயாட்சியை மையமாகக் கொண்ட புதிய மாற்றுத் தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் பகுதியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா போன்ற வலுவான மாநிலக் கட்சிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

   

குறிப்பாக, அண்மைக் காலமாக இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கம் ஏற்படுத்தி வரும் ‘காக்ரோச் ஜனதா கட்சி போன்ற புதிய மக்கள் இயக்கங்களுடனும் திமுக தொடர்பில் இருப்பது டெல்லி அரசியலில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகள் மற்றும் புதிய மக்கள் சக்திகளை ஒருங்கிணைக்கும் திமுகவின் இந்த முயற்சி, தேசிய அரசியலில் காங்கிரஸின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் டெல்லி ஆளும் வர்க்கத்திற்கும் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.