ஐயோ… பஸ் மோதப் போகுது… இண்டிகேட்டர் போட்டு சடாரென… திரும்பிய காரால் அரங்கேறிய கோர விபத்து… நடுங்கவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 30, 2026

Spread the love

கேரளா மாநிலம் செம்மஞ்சேரி பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகேயுள்ள மீடியன் கேப் வழியாக மாற முயன்றபோது இந்த ஆபத்தான விபத்து நிகழ்ந்துள்ளது. பெரும்பாலான விபத்துகள் பெட்ரோல் பங்க் அமைந்திருக்கும் பகுதிகளைச் சுற்றியே நடப்பது போல, இங்கேயும் வாகன ஓட்டியின் அவசரமும் கவனக்குறைவுமே பிரதான காரணியாக அமைந்துள்ளது.

இடதுபுற சாலையில் சென்று கொண்டிருந்த டாடா டியாகோ கார் ஓட்டுநர், பெட்ரோல் பங்கிற்குச் செல்வதற்காகத் திடீரென வலதுபுற இண்டிகேட்டரை போட்டுள்ளார். ஆனால், தனக்கு பின்னால் என்ன வாகனம் வருகிறது என்பதை அவர் சரியாகக் கவனிக்காமல் மீடியன் கேப்பை நோக்கி காரைத் திருப்ப முயன்றுள்ளார்.

   

https://twitter.com/motordave2/status/2105265943060615325/video/1

   

அதேவேளையில், பின்னால் வலதுபுற பாதையில் வந்துகொண்டிருந்த சிசிடிவி பேருந்தின் பிளைண்ட் ஸ்பாட் பகுதியில் இந்த டாடா டியாகோ கார் சிக்கியதால், பஸ் ஓட்டுநரால் காரை உடனடியாகக் கணிக்க முடியவில்லை. கடைசி நொடியில் காரைக் கண்டு பேருந்தை திருப்ப முயன்றும், மோதலைத் தவிர்க்க முடியாமல் இந்த விபத்து நேரிட்டுள்ளது.