அடியாத்தி…! பள்ளி பேருந்துக்குள் 5 அடி நீள வெள்ளை நிறப் பாம்பு…. அலறிய மாணவர்கள்…. டிரைவரின் சாதூர்யம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிப் பேருந்துக்குள், சுமார் 5 அடி நீளமுள்ள வெள்ளை நிறப் பாம்பு ஒன்று ஒளிந்திருந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காகப் பேருந்தை எடுக்க வந்த ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக இருக்கைக்கு அடியில் 5 அடி நீள வெள்ளைப் பாம்பு நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்ட அவர், பேருந்தை இயக்காமல் நிறுத்திவிட்டு, பாம்பு பிடிக்கும் நிபுணரான ஹனே சிங்கிற்குதகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பாளர் ஹனே சிங், பேருந்துக்குள் இருந்த 5 அடி நீள வெள்ளை பாம்பைப் மிகத் துணிச்சலாகப் பிடித்து, பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தார். பாம்பு வெற்றிகரமாகப் பிடிக்கப்பட்டதைக் கண்ட பள்ளிச் சிறுவர்களும் பேருந்து ஓட்டுநரும் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வெளிப்படுத்தினர்.