“சிப்ஸ், ஆப்பிள் தருவதாக கூறி பாலியல் தொல்லை…” 3 மணி நேரம் நிற்க வைத்து செருப்பால் அடித்த சிறுமி… பொதுமக்கள் கொடுத்த தண்டனை…. பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 30, 2026

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தில் 3 குழந்தைகளுக்குத் தந்தையான நபர் ஒருவர், 13 வயது சிறுமிக்கு சிப்ஸ் மற்றும் ஆப்பிள் தருவதாக ஆசை காட்டி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு முதலில் சிப்ஸ் கொடுத்து ஆசை காட்டிய அந்த நபர், பின்னர் ஆப்பிள் தருவதாகக் கூறி லாரிக்கு பின்னால் அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறி அழுதுள்ளார். அழுதுகொண்டே ஓடிய சிறுமி, அருகில் இருந்த கடைக்காரரிடம் நடந்த கொடூரத்தை கூறி அழுதுள்ளார்.

   

சிறுமியின் நிலையைக் கண்டு கொதித்தெழுந்த கடைக்காரரும் அப்பகுதி மக்களும், அந்த நபரைப் பிடித்து முதற்கட்டமாக கோழி போல நிற்க வைத்து, சிறுமியின் கையாலேயே செருப்பால் அடிக்க வைத்துள்ளனர். சுமார் 3 மணி நேரம் பொதுமக்கள் அவருக்குக் கடும் தர்ம அடி கொடுத்து, பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.