என்னக் கல்யாணம் பண்ணிக்கோ… வற்புறுத்திய காதலி… OYO விடுதியில் கொடூரக் கொலை… காதலன் கைது… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

ஹைதராபாத் மாதப்பூர் பகுதியிலுள்ள ஓயோ விடுதியில் நடைபெற்ற இளம் பெண் கொலை வழக்கை மாதப்பூர் காவல்துறையினர் வெற்றிகரமாகத் துப்பறிந்து, குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சரோன் நிகிதா டோப்னோ என்ற பெண் கொலை செய்யப்பட்ட இச்சம்பவத்தில், அவரது நண்பரான ஸ்ரீனிவாஸ் ரவிதேஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21-ஆம் தேதி சித்திக் நகரிலுள்ள ஓயோ விடுதியில் இருவரும் தங்கிய நிலையில், தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண் வற்புறுத்தியதால் அன்றைய இரவே அவரைக் கொலை செய்ததாகக் குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைக்குப் பின் அப்பெண் மயங்கி விழுந்துவிட்டதாக விடுதி ஊழியர்களிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஸ்ரீனிவாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்ததும், அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். விடுதி அறையில் பெண்ணின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்ததையும், சுவர் மற்றும் படுக்கை விரியில் ரத்தக்கறைகள் இருப்பதையும் கண்ட காவல்துறையினர், தடயவியல் குழுவின் உதவியுடன் ஆதாரங்களைச் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் பிரிவு 103(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

   

கொலை நடந்த நாளன்றே அனகாபல்லி மாவட்டத்திலுள்ள தனது சொந்த கிராமத்திற்குத் தப்பிச் சென்ற ஸ்ரீனிவாஸ் ரவிதேஜா, மறுநாள் தற்கொலைக்கு முயன்றதால் விசாகப்பட்டினம் கேஜிஎச் (KGH) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்ச முடிந்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் மாதப்பூர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து காவலில் எடுத்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாஸ் ரவிதேஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்யக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.