அமைச்சரவையில் திடீர் மாற்றம்?…. 3 பேரின் விக்கெட் அவுட்…. உள்ளே வரும் விஜய்யின் தீவிர ஆதரவாளர்…. தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்….!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்படலாம் என்றும், அமைச்சர்கள் சரத், ஜெகதீஸ்வரி, விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

அதே நேரத்தில், மக்கள் மன்றம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் இணைந்து களப்பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ ஒருவருக்கு இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.