சீதாப்பூர் மாவட்டத்தில், தனது மனைவி பிரதீப் என்பவருடன் ஓடிப்போவிட்டதாகக் கோபமடைந்த கணவர் ராஜேந்திரன், மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து உடனடியாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மனைவியின் இந்த தவறான உறவால் மிகுந்த மனவேதனையும் ஆத்திரமும் அடைந்த கணவர், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் கோபத்தின் உச்சத்திலிருந்த ராஜேந்திரன், மனைவியின் நெஞ்சில் அமர்ந்து, கத்தியால் அவரது மூக்கை கொடூரமாக அறுத்துள்ளார். கணவரின் இந்த திடீர் தாக்குதலால் படுகாயமடைந்த அப்பெண், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்துள்ளார்.
https://twitter.com/RajuSharmajour1/status/2104552680282808650/video/1
தற்போது மூக்கு துண்டிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொடூரத் தாக்குதலை நடத்திய கணவர் ராஜேந்திரன் தலைமறைவாகிவிட்ட நிலையில், காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
