உன்ன விட மாட்டேன்..! ஜாமீனில் வந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி… வாலிபர் செய்த வெறிச்செயல்… காவல் நிலையத்திலேயே அரங்கேறிய பயங்கரம்…!!

By Gayathri on புரட்டாதி 28, 2026

Spread the love

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த வடகரா காவல் நிலைய வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு கொலைமுயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, தனது சிறப்புப் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டவர் கீர்த்தனா. சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இவர், நீதிமன்ற உத்தரவின்படி காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஒருவரால் சரமாரியாகக் கத்தியால் குத்தப்பட்டார்.

கீர்த்தனா மீது இந்தத் கொடூரத் தாக்குதலை நடத்தியவர் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் ஜினீஷ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் முன்பு ஒன்றாக வசித்து வந்த நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு ஜினீஷுடனான அனைத்துத் தொடர்புகளையும் கீர்த்தனா முற்றிலுமாகத் துண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே அவரைக் கொலை செய்யும் நோக்கோடு காவல் நிலையத்திலேயே இந்தத் தாக்குதலை ஜினீஷ் நடத்தியுள்ளார். கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் படுகாயமடைந்த கீர்த்தனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; தாக்குதல் நடத்திய ஜினீஷை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.