“16 வினாடிகளில் 14 முறை…” இரும்பு பைப்பால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட வாலிபர்…. பட்டப்பகலில் நடுரோட்டில் அரங்கேறிய பயங்கர சம்பவம்….!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் பட்டப்பகலில் நடுரோட்டில் 28 வயதான அங்கித் படேல் என்ற வாலிபர் இரும்புப் பைப்பால் அடித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அங்கித் படேலைத் தாக்கிய நபர், வெறும் 16 வினாடிகளுக்குள் அவரது தலையில் சுமார் 14 முறை இரும்புப் பைப்பால் சரமாரியாகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

இந்த நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரத் தாக்குதல் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த அங்கித் படேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியைக் கைது செய்யத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.