உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அன்னு. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான இவருக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தனது புகைப்படத்திற்குப் பின்னால் அழகான மாப்பிள்ளை ஒருவரை எடிட் செய்து வைப்பவருக்கு ரூ.500 பரிசு வழங்கப்படும் எனச் சவால் விடுத்திருந்தார்.
இதனைப் பார்த்த வாலிபர் ஒருவர், பிரபல ஆபாசப் பட நடிகரான ஜானி சின்ஸின் உருவத்தை அந்தப் பெண்ணின் புகைப்படத்திற்குப் பின்னால் ஏஐ மூலம் எடிட் செய்து கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “எனக்கு இந்த நபரை யார் என்று தெரியும், இப்படித் தவறான புகைப்படங்களை அனுப்பக் கூடாது” என்று கூறி கோபமடைந்ததுடன், பரிசுத் தொகையான ரூ.500-ஐ அவருக்குத் தர மறுத்துவிட்டார். இந்த விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில் தற்சமயம் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.
