என்ன கொடுமை சார் இது… ஹெல்மெட் போடாத கிட்டார் பைக்கு… ரூ 500 அபராதம் போட்ட AI கேமரா… பெங்களூரில் ஷாக்கிங் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

பெங்களூரில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிய பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கேமராக்கள், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கிதார் பையை ஹெல்மெட் அணியாத பில்லியன் ரைடர் என தவறாகக் கணித்து ரூபாய் 500 அபராதம் விதித்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க AI கேமராக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்த விசித்திரமான தவறு அரங்கேறியுள்ளது.

வாகன ஓட்டி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் பின்புறம் கிதார் பையை மாட்டிச் சென்றுள்ளார். கேமராவில் பதிவான அந்தப் படத்தை பகுப்பாய்வு செய்த AI தொழில்நுட்பம், பின்புறம் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டு தானாகவே ரூ 500 செல்லானை உருவாக்கியுள்ளது. வாகன உரிமையாளருக்கு அபராதச் செய்தி வந்த பிறகே, கேமராவின் இந்தத் தவறான கணிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

   

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாட்டைப் பாராட்டும் அதே வேளையில், இதுபோன்ற AI அமைப்புகளில் உள்ள பிழைகள் வாகன ஓட்டிகளுக்கு வீண் சிரமத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தானியங்கி அபராத முறைகளில் மனிதர்களின் சரிபார்ப்பு அவசியம் என்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுவதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.