மேடம்… ஆர்டர் வந்திருக்கு… முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி… டெலிவரி பாயை கதறவிட்ட சகோதரிகள்… நெஞ்சை உலுக்கும் பகீர் கொள்ளை…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

ரோஹிணி பகுதியில் ஆன்லைன் டெலிவரி ஊழியரை ஏமாற்றி கொள்ளையடித்த இரண்டு சகோதரிகளை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களில் ஒருவர் வாடிக்கையாளர் போல நடித்து டெலிவரி ஊழியரை வரவழைத்து, அவர் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவி இந்தத் துணிச்சலான கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்.

டெலிவரி ஊழியர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சம்பவம் நடந்த 15 மணி நேரத்திற்குள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இரண்டு பெண்களையும் வெற்றிகரமாகக் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சில பார்சல்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

   

போலீசாரின் இந்த விரைவான நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பிடிபட்ட பெண்களிடம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.