திக் திக்… மின்சார ரிக்‌ஷாவால் கண் இமைக்கும்…. நொடியில் தலைகீழாக சுழன்ற கார்… டெல்லியில் அரங்கேறிய பகீர் விபத்து…!

By Swetha on புரட்டாதி 26, 2026

Spread the love

டெல்லியின் சக்தி நகர் ரவுண்டானா அருகே கார் ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் வெளியாகி உள்ளன.

முதற்கட்ட தகவல்களின்படி, குறுக்கே வந்த மின்சார ரிக்‌ஷாவை மோதுவதைத் தவிர்க்க ஓட்டுநர் முயன்றபோது, காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியின் நடுவே தலைகீழாகக் கவிழ்ந்தது.

   

https://twitter.com/HateDetectors/status/2103796735508365819/video/1

   

காரில் பயணித்தவருக்குப் பலத்த காயங்கள் ஏதுமின்றி லேசான காயங்களுடன் தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் மற்றும் ஓட்டுநரின் தற்போதைய நிலை பற்றிய விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.