“அப்பாவி சிறுமிகளை தூக்கியது எப்படி?”…. SIT கிடுக்கிப்பிடி விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை…. ஜெம் வீரமணி வழக்கில் அரசியல் பெரும் புள்ளிகள்….!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிம்ஹன், சாந்தி உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் சிறப்பு புலனாய்வுப் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பாவிச் சிறுமிகளை ஆசைகாட்டி, மூளைச்சலவை செய்து அழைத்து வந்தது எப்படி, இதற்குப் பின்னணியில் இடைத்தரகர்களாகச் செயல்பட்ட நபர்கள் யார் என்பன உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கணைச்சரங்களாகத் தொடுத்து சாந்தியை அதிகாரிகள் தீவிரமாகக் கடைந்து எடுத்துள்ளனர். விசாரணையில் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.