“தோஷம் கழிக்கிறேன்.. உள்ளே வா”…. போலி சாமியாரின் வெறிச்செயல்… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

மராட்டிய மாநிலத்தில் ஜாதக தோஷம் கழிப்பதாகக் கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்வர் மஹராஜ் என்பவன், அச்சிறுமியின் ஜாதகத்தில் உள்ள தோஷத்தை சிறப்புச் சடங்குகள் மூலம் நிவர்த்தி செய்வதாகக் கூறி நம்பவைத்துள்ளான். கடந்த ஜூன் மாதம் சிறுமியின் வீட்டிலேயே சடங்கு செய்வதாகக் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பிணியானார். மேலும், இதுபற்றி வெளியே கூறினால் தோஷம் மீண்டும் தாக்கும் என மிரட்டியதால், அச்சத்தால் சிறுமி இந்த விவரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.

அண்மையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே சிறுமியின் பெற்றோர் விவேகானந்த சவுக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், குற்றவாளி மீது புதிய பாரதிய நியாய சன்ஹிதா குற்றவியல் சட்டம், போக்சோசட்டம் மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.