உங்க மனைவியை திட்டும்போது ஏன் கம்முன்னு இருந்தீங்க?…. முதல்வர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து திமுக வேட்பாளர் பரந்தாமன் சுடச்சுட பதிலடி….!

By Nanthini on புரட்டாதி 26, 2026

Spread the love

மதுராந்தகம் தொகுதி பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், திமுக அரசு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசினார். “திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகளைச் சீரழித்த வீரமணி தப்பிக்க விடப்பட்டதுடன், அந்த வழக்கும் அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டது; இவர்களுக்குள் என்ன ரகசிய ஒப்பந்தம் நடந்தது என்று தெரியவில்லை,” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும், “திமுகவினர் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி வருகிறார்கள், மாநிலத்தில் ஆபாச நதியே ஓடுகிறது; இதனை திமுக தலைமை குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கிறது,” என்றும் சரமாரியாகத் தாக்கினார்.

விஜய்யின் இந்த அதிரடி விமர்சனங்களுக்கு மதுராந்தகம் தொகுதியின் திமுக வேட்பாளர் பரந்தாமன் உடனடியாகவும் அழுத்தமாகவும் பதிலடி கொடுத்துள்ளார். “பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளில் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் சொந்த வாழ்க்கையைக் குறிப்பிட்டுப் பதிலடி தந்தார். “உங்களது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்தபோது, உங்கள் கட்சியின் தொண்டர்களே அவரை மிகவும் இழிவாகவும் அவதூறாகவும் பேசினார்கள்; அப்போது தட்டிக் கேட்கத் துப்பில்லாத நீங்கள், இப்போது பெண்கள் பாதுகாப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது,” என்று சாடினார்.

   

மேலும் தொடர்ந்த பரந்தாமன், “மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்டை அப்படியே மேடையில் வந்து வாந்தி எடுக்காமல், கொஞ்சம் யோசித்து கவனமாகப் பேசுங்கள் விஜய் சார்,” எனச் சவால் விடுத்தார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் அதிரடித் தாக்குதலும், அதற்குத் திமுக வேட்பாளரின் காரசாரமான பதிலடியும் மதுராந்தகத் தொகுதியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.