கடவுளே… நடக்க முடியாத தாய்…. பிரிந்து செல்லாத மகன்… பேருந்து தீ விபத்தில் அரங்கேறிய… நெஞ்சை பிளக்கும் சோகம்…. உ . பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நோய்டாவில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், நடக்க இயலாத தாயைக் காப்பாற்ற முயன்ற மகனும் அவருடன் சேர்ந்து தீயில் கருகி உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹோபா மாவட்ட பா.ஜ.க பொருளாளர் நீரஜ் குப்தாவின் மனைவியான சுனிதா மற்றும் அவரது மகன் ஷஷாங்க் ஆகியோரே இந்த விபத்தில் பலியானவர்கள் ஆவர். இவர்கள் சார்க்காரி நகரத்தில் உள்ள ராஜமந்திர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். நடக்க முடியாத நிலையில் இருந்த தாயை விட்டுப்பிரிய மனமில்லாமல், அவரைக் காப்பாற்ற போராடிய மகனும் அவருடனே உயிரை விட்டது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

   

பேருந்தில் தீ வேகமாகப் பரவியதால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இருப்பினும், சுனிதாவால் சுயமாக நடக்க முடியாது என்பதால், ஷஷாங்க் தன் தாயை மீட்கும் முயற்சியிலேயே பேருந்துக்குள் தங்கிவிட்டார். துரதிர்ஷ்டவசமாக தீயின் வேகம் அதிகரித்ததால் இருவராலும் வெளியேற முடியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.