என்னங்க இது…? ரூ.500 கொடுத்து வாங்கிய காபி…. ஸ்ட்ராபெர்ரியில் ஒட்டிக்கிடந்த ஈ… இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு அலறவிட்ட டெல்லி பெண்….!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2026

Spread the love

டெல்லியைச் சேர்ந்த பிரபல சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரான ஷிகா என்பவர், பிரபல ‘ஸ்டார்பக்ஸ்’ உணவகத்தில் சுமார் ரூ.500 கொடுத்து வாங்கிய காபியில், செத்துப்போன ஈ ஒன்று ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் ஒட்டிக்கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த அருவருக்கத்தக்கச் சம்பவத்தை உடனடியாகத் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்த அவர், “ரூ.500 பணம் வாங்கிக் கொண்டு இப்படிப்பட்ட சுகாதாரமற்ற பானத்தையா வழங்குகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி பெரும் சர்ச்சையைக் கிளப்பியதுடன், உணவுப் பாதுகாப்பு குறித்து நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

   

https://www.instagram.com/reel/DdjHqYSKSVE/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==

   

இச்சம்பவம் சோஷியல் மீடியாவில் பூதாகரமானதைத் தொடர்ந்து, ஸ்டார்பக்ஸ் இந்தியா நிறுவனம் ஷிகாவின் பதிவில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், தங்களது கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் எந்தக் குறையும் இல்லை என்றும் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.