BREAKING: இரவோடு இரவாக அதிரடி கைது…. ஏர்போர்ட்டில் விடிய விடிய ஆக்ஷன்… தப்பியோட முயன்ற ‘வலதுகரம்’ லாக்…. கே.என். நேரு அதிர்ச்சி….!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

ரூ.1,020 கோடி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலதுகரமாகச் செயல்பட்ட கவிபிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த விசாரணையின் போது, அவரது வாட்ஸ்ஆப் உரையாடல்கள் மற்றும் பரிவர்த்தனைகளில் இருந்து வழக்கிற்குத் தேவையான பல முக்கிய ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக இருந்த முக்கிய நபர் சிக்கியதும், அவரிடமிருந்து திரட்டப்பட்ட வலுவான டிஜிட்டல் ஆதாரங்களும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தரப்பிற்குப் பெரும் அரசியல் நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.