“ப்ளீஸ்… யாராவது உதவி செய்யுங்க…” உயிருக்கு போராடும் பெற்றோர்… ஆதரவில்லாமல் தவிக்கும் பிள்ளைகள்…. கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் கரக்கம்பாடி ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பி. யஷ்வந்த் மற்றும் பி. அசிதா. இவர்களது பெற்றோர் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி எதிர்பாராத விதமாக அரங்கேறிய கொடூர சாலை விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தனர்.

தற்போது இரு பெற்றோரும் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். வீட்டில் வேறு எந்த ஆதரவும் இல்லாததால், அந்தப் பிஞ்சு குழந்தைகள் இருவரும் உணவிற்கும் அன்றாடத் தேவைகளுக்கும் வழியின்றித் தவித்து வருகின்றனர்.

   

பெற்றோரின் நிலையைக் கண்டு செய்வதறியாது தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு உடனடியாக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் நாரா லோகேஷ் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். பெற்றோர் உயிருக்குப் போராடும் நிலையில் குழந்தைகள் ஆதரவின்றித் தவிக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.